Eeramana Rojave 2 Today Episode | 13.10.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா கஷ்டப்பட்டு நரேனை கண்டு பிடித்து இழுத்து வந்தால் பாதியிலேயே ஓடிவிட்டான் அவன். பின் காவ்யா அவரை இழுத்து வந்தார். அவன் வந்ததும் அவனை அடித்து உண்மையை சொல்ல வைத்தார் ஜீவா. ஆனால் அப்போதும் தேவி, தனக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஜீவா என் மேல் உள்ள கோவத்தில் தான் இதை செய்கிறான் என்று கூறினார். மேலும் ஜீவாவை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பவும் அருணாச்சலத்துக்கு கட்டளை போட்டார். ஆனால் காவ்யா விடமால் சாட்சி சொல்லியும் நம்பாமல் இருக்க எப்படி முடியும் என்று கேட்டார். பின் தேவியிடம் இருந்து பணம் வாங்கிய ஆதாரம், தேவி நம்பரில் இருந்து இத்தனை முறை இவனுக்கு கால் வந்து உள்ளது என்று ஆதாரங்களை காட்டினார் ஜீவா. ஆனால் அதற்கும் தேவி, இதை எல்லாம் ஜீவா தான் வேண்டும் என்றே செட்டப் செய்து நடிக்கிறான் என்று கூறினார். உடனே அவரது அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டார். அதே நேரம் அவர்கள் வீட்டுக்கு போலீஸும் வந்து சேர்ந்தது. பின் விசாரித்து தேவியை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் தேவி கதவி தீர்க்கவே இல்லை. பின் ஜீவா கதவை உடைத்து உள்ளே சென்று தேவியை கைது செய்ய வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author