Eeramana Rojave 2 Today Episode | 14.03.2022 | Vijaytv
Eeramana Rojave 2. 14.03.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று,பிரியா பார்த்திபன் இருவருக்கும் விளையாட்டு போட்டிகள் பாட்டி நடத்தினார். ஒரு குடத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு மோதிரத்தை போட்டு அதை யார் முதலில் எடுக்கிறார்கள் என்று போட்டி வைத்தார். அதில் பிரியா அடன்க மோதிரத்தை முதலில் எடுத்து வெற்றியும் பெற்றார். பின் தேங்காய் ஒன்றை யார் இறுக்கமாக பிடித்து கொள்கிறார்கள் என்பது போல் மற்றொரு போட்டி வைத்தார். அதிலும் பிரியாவே வெற்றி பெற்றார். ஆனால் பிரியா தானாக வெற்றி பெறவில்லை எனவும், பார்த்திபன் தான் விட்டு கொடுத்தார் இருமுறையுமே என்றும் கூறினார். இதை கேட்டார் அனைவரும் சந்தோசத்தில் இருந்தார்கள். அழகர் மட்டும் இதை எல்லாம் பார்த்து எரிச்சல் அடைந்தார். சக்தி பதட்டமாக காவ்யாவிடம் தனது நகை ஒன்றை காணவில்லை என்று கூறினார். காவ்யா பதட்டத்தில் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தார். பின் ஜீவாவிடம் உதவி கேட்டார். அவரும் இந்த வீட்டில் எல்லா இடமும் கேமரா இருப்பதால் அதை பார்க்கும்படி கூறினார். பின் அடுத்த வேலையை பார்க்கச்சென்றார். அழகர் இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று முடிவு எடுத்து நேற்று பார்த்திபன் குடி போதையில் மீராவுடன் தண்ணீரில் குதித்து, அவரை பின் காப்பாற்றியது என்று வரை எடுத்த வீடியோ வை அவருக்கு சாதகமாக பயன்படுத்தினார். பஞ்சாயத்தை யும் கூட்டினார். இதனால் வீட்டில் ஒரே பதட்டமாக இருந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…