ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அழகர் கொடுத்த புகார் பற்றிய விசாரணை ஊர் பெரியவர்கள் நடத்தினார்கள். அதில் பார்த்திபன் மற்றும் மீரா இருவரும் நெருக்கமாக இருக்கும் ஒரு வீடியோவை அழகர் எடுத்து கமித்தார். ஆனால் பார்த்திபன் அது ஒரு உதவியாக தற்செயலாக நடந்த செயல் என்று கூறினார். ஆனால் அழகர் அதை திரித்து கூறினார். பார்த்திபனும் ஒழுக்கம் இல்லை என்று திரும்ப திரும்ப கூறினார். ஆனால் பிரியா இந்த வீடியோவை எல்லாம் நம்ப போவது இல்லை என்று கூறினார். அருணாச்சலம் என் மகன் மீது எந்த தவறும் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இதை துறை நம்பினால் தாராளமாக இந்த திருமணத்தை நிறுத்தலாம் என்று கூறினார். ஆனால் துரை பார்த்திபன் மீதும், அருணாச்சலம் மீதும் எனக்கும் துளி கூட சந்தேகம் இல்லை என்று கூறினார். அந்த சமயம் காவ்யா ஒரு ஆதாரத்துடன் வந்தார். இந்த வீட்டை சுற்றி கேமரா இருப்பதாகவும் அதில் என்ன நடந்தது என்றும் யார் உண்மையில் தவறு செய்தது என்றும் தெளிவாக இருப்பதாக கூறினார். பின் அவர் கொடுத்த வீடியோவை பார்த்த பின் அனைவருக்கும் அழகர் தான் இந்த வேலையை செய்து உள்ளார் என்று தெரிய வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…