Eeramana Rojave 2 Today Episode | 15.04.2022 | Vijaytv
eeramana Rojave 2. 15.04.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, விருந்து முடிந்ததும் இரண்டு ஜோடிகளையும் அவர்கள் அறையில் போய் தூங்கும்படி கூறினார்கள். ஆனால் காவ்யா அப்போது தனக்கு சக்தி மற்றும் பிரியாவிடம் ஒன்றாக தூங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு துரை அதெல்லாம் சரியாக வராது, மாப்பிள்ளையுடன் சேர்ந்து தூங்கும்பாடி கூறினார். ஆனால் ஜீவா பார்த்திபன் இருவரும் பரவாயில்லை என்றார்கள். பின் சக்தி பார்த்திபன் எப்படி என்று காவ்யாவிடமும் ஜீவா எப்படி என்று பிரியாவிடமும் கேட்டார். அவர்களும் நல்லபடியாகவே கூறினார்கள். காவ்யா நடு இரவில் தூங்காமல் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது பிரியா இந்த வாழ்க்கை இப்படியே முடியாது, எதார்த்தத்தை புரிந்து கொண்டு மனதை மாற்றி நடக்கும்படி கூறினார். ஜீவாவும் தன்னிடம் எதுவும் பேசுவது இல்லை என்று கூறினார். அதே நேரம் பார்த்திபன் ஜீவாவிடம் தன் கவலையை கூறினார். காவ்யா தன்னை ஒரு நண்பனாக கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறினார். அருணாச்சலம் வீட்டில் தேவி மீண்டும் ஒரு பிர்ச்சனையை உருவாக்கினார். பார்த்திபன் மற்றும் காவ்யா இருவரும் வேறு வேறு அறையில் தூங்கினார்கள் என்று ஒரு பரசனையை ஆரம்பித்தார். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட அருணாச்சலம் மற்றும் பார்வதி இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….