Eeramana Rojave 2 Today Episode | 15.07.2022 | Vijaytv
eeramana Rojave 2. 15.07.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவிடம் பார்வதி தன் குழப்பத்தை கேட்டார். காவ்யா திருமணத்துக்கு முன் வேறு யாரையும் காதலித்தாரா என்று தயக்கமாக கேட்டார். அதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த காவ்யா, சற்று நேரத்தில் உண்மையை கூறினார். காவ்யா காதலித்த விஷயம் உண்மை என்று தெரிந்த பார்வதியால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தானும் இந்த குடும்பமும் மகா பெரிய தவறு செய்து விட்டதாக கூறினார். உன்னையும் கட்டாயப்படுத்தி, பார்த்திபனயும் கட்டாய படுத்தி இந்த திருமணத்தை நடத்தி இருவர் வாழ்க்கையையும் சீரழித்து விட்டோம் என்று அழுதார். மேலும் இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்றார். பின் நீ பார்த்திபனை விட்டு விலகியே இரு என்றார். பார்த்திபன் உன்னை வெருக்கும்படி நடந்துகொள் என்று கூறினார். பிரியா நரேன் சொன்னதை நினைத்து பதறினார். ஜீவா அவரது முகம் வாடி இருப்பதை பார்த்து அவரை விசாரித்தார். ஆனால் பிரியா எந்த பதிலும் சொல்லவில்லை. ஒன்றுமில்லை என்று சமாளித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…