Eeramana Rojave 2 Today Episode | 16.02.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியாவிடம் வம்பு செய்த ரவுடிகளை பார்த்திபன் தட்டி கேட்டார். பிரியாவுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். பின் பிரியா மற்றும் அந்த 4 பசங்களையும் அழைத்து சென்று பிரியா நடத்தும் இல்லத்தில் வந்து சேர்த்தார். பிரியாவின் சேவை மனப்பான்மையை பார்த்து பார்த்திபன் வியந்து போனார். அவரை பெருமையாக பேசினார். பின் தனக்கு வேலை இருப்பதாக கூறி உடனே கிளம்பினார். அவர்களுக்கு இடையே காதலும் புரிதலும் அதிகரித்தது. மீராவின் அப்பா துரை வீட்டுக்கு வந்தார். தனக்கு ஒரு உதவி வேண்டும் என்று கேட்டார். அருணாச்சலம் நான் கேட்ட உதவியை செய்ய முடியாது என்று கூறிவிட்டான். அதனால் உன்னால் அதை செய்ய முடியும் என்று கூறினார். துரையும் என்ன உதவி என்று கேட்டார். அதற்கு மீரா பார்த்திபனை காதலிப்பதாக கூறினார். அதனால் இந்த திருமணத்தை நிறுத்தி விட்டு என் மகள் ஆசைக்கு உதவி செய்யுமாறு கேட்டார். ஆனால் துரை இது குழந்தைகள் வாழ்க்கை பிரச்சனை, இதெல்லாம் நாம் மாற்ற முடியாது. இருவரும் கணவன் மனைவியாக நினைத்து வாள ஆரம்பித்து விட்டார்கள் அதனால் இது நடக்காது என்று கூறினார். தன்னை மன்னிக்கவும் கேட்டுகொண்டார். அவரும் வெளியில் நடித்துவிட்டு உள்ளே வன்மத்தோடு கிளம்பினார். இரவு நேரம் காவ்யாவுக்கு ஜீவா அழைத்து பேசினார். ஆனால் காவ்யா இரவு நேரம் என்பதால் பிரியா யார் என்ன என்று விசாரித்தார். ஆனாலும் ஜீவா அவரை மாட்டிவிடும் படியே விளையாட்டாக பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…