Eeramana Rojave 2 Today Episode | 16.05.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபனும் உடம்பு சரி இல்லாததால் காவ்யாவிடம் தைலம் ஒன்று கொடுத்து பார்த்திபனை கூடவே இருந்து பார்துகொள்ளுமாரு கூறினார். காவ்யா அதை வாங்கி வைத்துவிட்டு படிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த நேரம் பார்த்திபன் குளிர் காய்ச்சலில் அடிங்கினார். ரம்யா அவரை பார்த்து உடனே அவரை கவனிக்க ஆரம்பித்தார். அவருக்கு மருந்து தேய்த்து விட, சுடு தண்ணீர் கொடுப்பது என்று பார்த்துக்கொண்டார் ரம்யா. அந்த நேரம் காவ்யா அதை பார்த்ததும் அதான் பார்த்துக்கொள்ள ஆள் இருக்கே என்று மீண்டும் அவர் அறைக்கு சென்று தூங்கினார். நள்ளிரவில் வெளியில் வந்த பார்வதி பார்த்திபனை ரம்யா தான் கவனித்துக்கொள்கிறாள் என்பதை கவனித்தார். காவ்யாவை பார்த்தால் அவரது அறையில் தூங்கினார். இதனால் உடனே இத பிரச்சனைக்கு முடிவு எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். காலையில் தேவி அருணாச்சலத்தை பார்த்து காவ்யாவை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடு, அதுதான் இந்த குடும்பத்துக்கு நல்லது என்றார். மேலும் இரவு முழுதும் கண் விழித்து பார்த்திபனை பார்த்துக்கொண்டது ரம்யா மட்டும் தான் காவ்யா இல்லை எனவும் கூறினார். இதனால் காவ்யாவுக்கு எடுத்து புரிய வைக்க நினைத்த அருணாச்சலம் மற்ற பார்வதி காவியாவை தனியாக அழைத்து பேசினார்கள். பார்த்திபனை பார்த்துக்கொள்ள சொல்லி இருந்தேன் ஆனால் நீ அதை செய்யவில்லையே என்று பார்வதி கேட்டார். அதற்கு ரம்யா அவருக்கு துணையாக இருந்ததால் தான் அறைக்கு சென்றதாக காவ்யா கூறினார். திருமணத்துக்கு பின் நீதான் பார்த்திபனை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால் காவ்யா அதை காதில் வாங்காமல் பதிலும் சொல்லாமல் அந்த இடத்தில் இருந்து கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author