Eeramana Rojave 2 Today Episode | 17.02.2022 | Vijaytv

Eeramana Rojave 2.17.02.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் மற்றும் பார்வதி தனியாக பேசிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பார்வதி, தன் மருமகள் பிரியாவை புகழ்ந்து தள்ளினார். நாளை பிரதோஷம் என்பதே பிரியா சொல்லி தான் எனக்கே தெரியும் என்று கூறினார். பின் பார்த்திபனும் அவரை சந்தித்ததை பற்றி கூறினார். இந்த மாதிரி பானகளை கூட காப்பாற்றி படிக்க வைக்கிறார் என்று பெருமையாக கூறினார். நாள் பொண்ணு பார்க்க சென்ற போது கூட, இந்த சேவையை செய்வது தன என் ஆசை கனவு என்று கூறினார். இப்படி ஒரு நல்ல பொண்ணை நான் பார்த்ததே இல்லை என்று பார்த்திபன் பங்குக்கு புகழ்ந்து பேசினார். அடுத்த நாள் அனைவரும் நிச்சயத்துக்கு கிளம்ப ஆரம்பித்தார்கள். மாப்பிள்ளைக்கு என்ன சட்டை போட வேண்டும் எப்படி கிளம்ப வேண்டும் என்பதை அவரது தம்பிகள், ஜீவா மற்றும் அர்ஜுன் பார்த்துக்கொண்டார்கள். அதே போல் பிரியாவை கிளப்ப அவரது தங்கைகள், காவ்யா மற்றும் சக்தி தயார் செய்தார்கள். பின் மண்டபத்துக்கு தேவையானதை ஏற்பாடுகள் செய்தார்கள் வீட்டில் அனைவரும். இந்த நிலையில் தேவி மட்டும் தனியாக உக்கார்ந்து தன் மகள் ஆசை பட்ட திருமணத்தை நடத்த முடியவில்லையே என்று அழுதுகொண்டு இருந்தார். இதை பார்த்த மஞ்சு ரம்யாவுக்கு வேறு ஒரு மாப்பிளை பார்க்க ஆரம்பிக்கலாம் என்று கூறினார். ஆனால் தேவி அதை மறுத்தார். தன் மகள் ஆசைப்பட்ட திருமணத்தை தடத்தியே தீருவேன் என்று கூறினார்.மஞ்சுவும் அவர் மனதை மாற்ற முயற்சி செய்தார். ஆனால் அது நடக்கவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…