Eeramana Rojave 2 Today Episode | 18.04.2022 | Vijaytv
eeramana Rojave 2. 18.04.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இரு ஜோடிகளையும் மறுவீட்டு விருந்து முடிந்ததும் பலகாரங்களை அனுப்ப ஏற்பாடுகள் நடந்தது. நாள் காவ்யா தன்னால் அந்த வீட்டுக்கு போக முடியாது. எனக்கு அடுத்த மாதம் பரிட்சை இருப்பதால் நான் இங்கேயே தங்கிக்கொள்கிறேன் என்றார். அதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே பிரியா காவ்யாவை புகுந்த வீட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது, பார்த்திபனும் உனக்கு துணையாக இருப்பார் என்று கூறினார். ஆனால் காவ்யா கோவத்தில் கத்திவிட்டு அவரது அறைக்கு சென்றார். இதனால் துரை ஒன்றும் புரியாமல் நின்றார். பின் மஹா காவ்யாவிடம் தனியாக பேசினார். என்னால் தான் உனக்கு இவ்வளவு பெரிய தண்டனை, என்னை மன்னித்துவிடு காவ்யா என்று கூறினார். காவ்யா ஒன்றும் புரியாமல் நின்றார். பின் ஜீவாவும் நீயும் காதலித்ததை பற்றி தனக்கு தெரியும் என்று கூறினார். அதை கேட்டதும் பொறுக்க முடியாமல் அழுது தீர்த்தார் காவ்யா. ஆனால் இதில் பிரியா வாழ்கையும் அடங்கி இருப்பதால் நீ இந்த வாழ்க்கையை ஏறுக்கொள்ளதான் வேண்டும் என்று கூறினார். பின் ஸ்மாதான் செய்து இரு ஜோடிகளையும் வழி அனுப்பி வைத்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…