Eeramana Rojave 2 Today Episode | 18.11.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் பார்வதியின் 60வது கல்யாணத்துக்கு சொந்தங்கள் நண்பர்கள் என்று வர ஆரமாபிதார்கள். வருபவர்களுக்கு ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார் அருணாச்சலம். தன் மகன்கள் மருமகள்கள் என்று அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஒருவர் அருணாச்சலத்தின் நண்பர் ரமணி என்பவர் வந்தார். அவரை பார்த்ததும் காவ்யா பதறிப்போய் அங்கு இருந்து கிளம்பினார். ஏற்கனவே ஜீவாவுடன் ஒரு நாள் மாலையில் நனைந்து விட்டபோது அருகில் இருந்த ஹோட்டலில் தங்கி இருக்கும் போது அவரை பார்த்தார். அவரே வந்து இங்கு எல்லாம் தாங்க கூடாது, திருமணத்துக்கு முன் இதெல்லாம் தவறு என்று அறிவுரை கூறியதை யோசித்தார். இனி இங்கே இருப்பது சரி இல்லை என்று நினைத்தார். அதனால் பார்வதி இடம் நடந்ததை கூறினார். அவர் கண்ணில் படாமல் நான் எங்காவது செல்கிறேன் என்றார். பார்வதியும் அதற்கு ஒத்துக்கொண்டார். மேலும் இப்படிப்பட்ட ஒரு பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்ததை நினைத்து வருந்தினார். திருமணத்துக்கு முன் பையனுடன் தனியாக ஹோட்டலில் தங்கி இருக்கிறேன் என்று தைரியமாக சொல்கிறாள் என்று கோவம் கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…