Eeramana Rojave 2 Today Episode | 19.04.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் பிரியா இருவரும் மாரு விருந்து முடிந்து புகுந்த வீட்டுக்கு பலகாரங்களுடன் வந்தார்கள். அதை பார்த்த பார்வதி மற்றும் அருணாச்சலம் மிகவும் சந்தோசம் கொண்டார்கள். துரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் என்று பேசினார்கள். பின் பிரியாவை வீட்டில் அனைவருக்கும் கொடுக்குமாறு பார்வதி சொன்னார். உடனே தட்டில் பலகாரங்களை எடுத்து சென்று தேவி மற்றும் மஞ்சு இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு வைத்து மஞ்சு பிரியாவை மட்டமாக பேசினார். பார்த்திபனை நிச்சயம் செய்து பின் ஜீவாவுடன் குடும்பம் நடத்துவதற்கு குத்தலாக பேசினார். இதை கேட்ட பிரியா அழுது கொண்டே பதில் சொல்ல முடியாமல் நின்றார். பின் தேவி அங்கு இருக்கும் காபி குடித்த கப்பை எடுத்து கழுவி வைக்க சொன்னார். அதையும் பிரியா செய்ய ஆரம்பித்தார். ஆனால் காவ்யா நடப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்து இந்த வேலையை நீ செய்ய கூடாது என்று கூறினார். இந்த வீட்டுக்கு நாங்கள் மருமகள்கள் உங்களுக்கு வேலைக்காரியாக வரவில்லை என்று எதிர்த்து பேசினார். சத்தம் கேட்டு அருணாசலம் மற்றும் பார்வதி அங்கு வந்தார்கள். பின் அவர்களை ஸ்மாதனம் செய்து அவர்கள் அறைக்கு அனுப்பினார்கள். பின் நடந்ததை கேள்விப்பட்டு ஜீவா பிரியாவிடம் வந்து பேசினார். அவர் அத்தை செய்தது தவறுதான் என்று மன்னிப்பு கேட்டார். அதே போல் காவ்யா பேசியதில் எந்த தவறும் இல்லை என்று பார்த்திபன் அவருக்கு ஆறுதல் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author