Eeramana Rojave 2 Today Episode | 19.05.2022 | Vijaytv
eeramana Rojave 2. 19.05.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டதை மீண்டும் அழுத்தமாக கூறினார். பார்த்திபன் எதற்கு மௌனமாக இருப்பதே இப்போது தனக்கு இந்த வீட்டில் சங்கடத்தை உருவாக்குவதாக கூறினார். மேலும் தனக்கு உடனே விவாகரத்து கொடுத்து தன் அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். இதை பொறுமையாக கேட்ட பார்த்திபன், தான் அதற்கு ஒத்துக்கொள்கிரேன் ஆனால் தனக்கு ஒரு பதில் வேண்டும் என்று கூறினார். காவ்யா இந்த வாழ்க்கை வேண்டாம் என்று கூறுவதற்கு என்ன காரணம் என்று கேட்டார். ஆனால் அதற்கு காவ்யாவால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. பார்த்திபன் தன் பெற்றோர்களிடம் இதை பற்றி பேசினாலும் இதே கேள்வி தான் முதலில் வரும் அதனால் அதற்கான பதில் தெரியாமல் நான் விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று கூறினார். காவ்யாவும் தன்னால் எந்த காரணமும் சொல்ல முடியாது என்று கூறினார். இதை பற்றி யோசித்தபடியே பார்த்திபன் வேலையில் கவனம் இல்லாமல் இருந்தார். மாடியில் இருந்து கீழே விழும் அளவுக்கு கவனம் இல்லாமல் எதையோ யோசித்தபடி இருந்தார். அந்த நேரம் ஜீவா தான் பார்த்திபனை காப்பாற்றினார். ஜீவா என்ன என்று விசாரித்ததில் பார்த்திபன் நடந்ததை கூறினார். அதற்கு அவர் என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….