Eeramana Rojave 2 Today Episode | 19.07.2022 | Vijaytv
eeramana Rojave 2. 19.07.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் புத்தகம் ஒன்று எடுக்க ஹாலுக்கு வந்தார். அங்கு இருந்த நாற்காலி மேல் இருந்த புத்தகத்தை எடுத்தார். அப்போது தேவி அங்கு வைத்து இருந்த அவரது ஃபோன் கீழே விழுந்தது. அதை பார்த்து காவ்யாவை திட்டினார். மறியாதியாக ஃபோனை எடுத்து தர வேண்டும் என்று மிரட்டலாக பேசினார். ஆனால் காவ்யா அதெல்லாம் எடுத்து தர முடியாது என்றார். அதற்கு தேவி, காவ்யா அவரது அப்பா குடும்பம் என அனைத்தையும் இழுத்து அசிங்கமாக பேசினார். இதனால் கோவத்தில் காவ்யா தன் அப்பாவை பற்றி பேச எந்த உரிமையும் இல்லை என்றார். மேலும் பிரியாவை அழைத்தார் தேவி. அவர் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால் தேவி மீண்டும் காவ்யாவை பற்றியும் அவர்களது அப்பாவை பற்றியும் தவறாக பேசினார். இதனால் கோவத்தில் பிரியா, காவ்யாவை உள்ளே அனுப்பி விட்டு பேச ஆரம்பித்தார். அடுதவள் புருஷனுக்கு காத்திருக்கும் உங்க பொண்ணை விட, அது தெரிந்தும் அதற்கு ஆதரவு சொல்லும் உங்களை விட, என் அப்பா எங்களை நல்லாவே வளர்த்து உள்ளார் என்று மூஞ்சியில் அடித்தது போல் கூறினார். பார்த்திபன் காவ்யாவை தத்ரூபமாக வரைந்தார். அதை அவரது அம்மாவிடம் காட்டி சந்தோசமும்பட்டார். ஆனால் அதை பார்த்த பார்வதி மேலும் தன் மகனின் வாழ்க்கையை பார்த்து வருந்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…