Eeramana Rojave 2 Today Episode | 19.09.2022 | Vijaytv
eeramana Rojave 2. 19.09.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, வீட்டில் காவ்யாவை காணவில்லையே என்று பார்த்திபன் தேடினார். அந்த நேரம் வெளியில் சென்ற காவ்யா சந்தோசமாக வீட்டுக்குள் வந்தார். வந்ததும் பிரியா செய்து வரும் சமூக சேவைக்கு ஒரு விருது கிடைக்க போவதாக பேப்பரில் காட்டினார். உடனே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிரியாவை புகழ்ந்தார்கள். இந்தியாவில் மொத்தமே 10 பேர்க்கு தன் இந்த விருது வழங்கப்படுகிறது என்றும் அதில் ஒரு ஆள் பிரியா என்றும் பெருமையாக பேசினார். வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள். பின் ஜீவாவிடம் இடன்க விஷயத்தை சொல்ல வேண்டும் என்று வேகமாக கிளம்பினார் பிரியா. ஆனால் ஜீவ ஏற்கனவே இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு கேசரி செய்து கொண்டு இருந்தார். பிரியாவுக்கு அந்த இனிப்பை ஊட்டிவிட்டு பின் வீட்டில் அனைவருக்கும் கொடுத்து சந்தோசத்தை பகிர்ந்தார்கள். மேலும் இதை ஜீவா தான் செய்தார் என்று தெரிந்ததும் அனைவருமே சந்தோசம் கொண்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….