Eeramana Rojave 2 Today Episode | 20.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 20.05.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தன் பிறந்தநாளை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று ஆர்வமாக கிளம்பி இருந்தார். ஆனால் ஜீவா வேலை செய்யும் இடத்தில் சரக்கு அடிக்க ஆரம்பித்தார். பார்த்திபன் இடம் காவ்யா விவாகரத்து கேட்டது, அதற்கு பார்த்திபன் தனக்கு மனைவி காவ்யா மட்டும் தான் என்று சொன்னது என அனைத்தயும் நினைத்து நினைத்து அதிகமாக குடிக்க ஆரம்பித்தார். அது தெரியாமல் பிரியா அவருக்காக காத்திருந்தார். இவர்கள் வருகைக்காக குழந்தைகள் கேக் வெட்ட காத்திருந்தார்கள். ரொம்ப நேரம் ஆகியும் வராததால் ஜீவாவுக்கு அழைத்தார் பிரியா. ஆனால் அவரது ஃபோனை சைட்டில் வேலை செய்யும் என்ஜினீயர் எடுத்து பேசினார். அவர் ஜீவா குடித்து இருப்பதையும் அவர் நிதானமாக இல்லை எனவும் கூறினார்.இதை கேட்ட பிரியாவுக்கு கோவம் கொந்தளித்தது. பின் எந்த இடம் என்று கேட்டு அந்த இடத்துக்கு சென்று ஜீவாவை வீட்டுக்கு அழைத்து வந்தார் பிரியா. மேலும் குழந்தைகளும் எமாற்றத்தோடு இருப்பார்களே என்று கோவத்தில் இருந்தார். அடுத்த நாள் பார்வதி பிரியாவின் பிறந்தநாளுக்கு அவருக்கு ஒரு பரிசு வனகி கொடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…