Eeramana Rojave 2 Today Episode | 21.03.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா மணப்பெண் அறையில் அலங்காரம் செய்து கொண்டு இருந்தார். அதே போல் பார்த்திபன் அவர் அறையில் அலங்காரம் செய்து தயார் ஆனார். இந்த நிலையில் மண்டபத்தில் விளையாடிக்கொண்டு இருந்த ஒரு குழந்தை கரெண்டில் கையை வைத்து மயங்கி விழுந்தது. இதை பார்த்தவுடன் ஜீவா அந்த குழந்தையை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் இது எதோ ஒரு அபசகுணம் போல் உள்ளதே என்று பாட்டி பதட்டம் அடைந்தார். ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ரம்யாவை ஒரு மணமகள் போல் அலங்கரித்து தேவி மண்டபத்திற்கு வந்தார். ஆனால் இந்த கல்யாணத்தை நிறுத்தி உன் கழுத்தில் தாலி கட்ட வைப்பேன் என்று கூறி அவரை அழைத்து வந்தார். ஆனால் இங்கு அருணாச்சலம் மனம் மாறி வந்து விட்டதாக நினைத்தார். பார்த்திபன் பிரியா இருவருமே தேவி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். பார்த்திபன் நான வளர்த்த பையன் அவன் திருமணத்தில் நான் இல்லாமால் எப்படி என்று பொய் சொன்னர். அதே நேரம் பாஸ்கர் மற்றும் அவர் மகள் மீரா இருவரும் வந்தார். அவர்களும் இந்த திருமணத்தை நிறுத்தி மீராவுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்தோடு வந்தார்கள். பிரியா அவர் அறையில் இருக்கும்போது ஒரு குழந்தை மரியம் என்ற சிஸ்டர் ஒருவர் வந்து இருப்பதாக கூறினார். அதனால் பிரியா தானே அவரை பொய் பார்க்க வேண்டும் என்று கிளம்பினார். ஆனால் கவயா மற்றும் சக்தி இருவரும் தடுத்தும் அவர் கேட்கவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…