Eeramana Rojave 2 Today Episode | 21.07.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியாவுக்கு மல்லிப்பூ மற்றும் அல்வா வாங்கி வந்ததை பார்த்த பார்த்திபன் தான் எப்படி இதை மறந்தேன் என்று யோசித்தார். மேலும் அதை ஒரு அவமானமாக நினைத்தார். தன் தம்பி அவன் பொண்டாட்டிக்கு வாங்கி கொடுப்பது போல் தனக்கு தோனவில்லையே என்று புலம்பினார். அதை காவ்யாவிடம் கூறவும் செய்தார். அதனால் நாளை காவ்யாவுக்கு போ அல்வா வாங்கி வர போவதாக கூறினார். ஆனால் காவ்யா அதெல்லாம் எதுவும் எனக்கு தேவை இல்லை என்றார். மேலும் தனக்கு அதில் விருப்பமும் இல்லை என்றார். இது போல் எதுவும் தன்னிடம் கொண்டு வர வேண்டாம் என்றும் கூறினார். ஆனால் பார்த்திபன் அதை பெரிதாக எடுத்துக்கவில்லை. மேலும் காவ்யாவை தொந்தரவு செய்யாமல் இருக்கிறேன் என்று கூறி மேலும் அவரை தொந்தரவு செய்தார். இதனால் படிப்பதையே நிறுத்திவிட்டு ஆவியா படுத்துவிட்டார். அதே போல் பிரியா தனக்கு வாங்கி வந்த பூவை தலையில் ஆசையாக வைத்துக்கொண்டார். மேலும் அந்த அல்வாவை ஆசையாக சாப்பிட்டார். ஜீவாவுக்கு ஊட்டியும் விட்டார். பின் ஜீவாவுக்கு சாப்பாடு பரிமாறி, அவர் சாப்பிட்ட பின் அவர் தட்டிலே பிரியாவும் சாப்பிட்டார். இதை பார்த்த ஜீவா அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தார் அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author