Eeramana Rojave 2 Today Episode | 22.02.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் நிச்சயம் ஆரம்பம் ஆனது. அப்போதும் பிரியாவின் தாய் மாமன் தன்னிடம் சம்மதம் வாங்கி தான் நிச்சயம் செய்ய வேண்டும் என்று கூறினார். உடனே அருணாச்சலம், முறையாக n பையன் பார்த்திபனும் உன் தங்கை மகள் பிரியாவை கட்டித்தர அனுமதிக்குமாறு கேட்டுகொண்டார். அவரும் சம்மதம் என்று கூறினார். பின் அடுத்த வேலைகளை ஆரம்பித்தார்கள். மணமக்கள் மாலை மாற்றினார்கள். இருவீட்டாறும் தட்டு மாத்தினார்கள். அதே நேரம் தேவி ரம்யாவிடம் நிச்சயம் நடப்பதை மறைத்து அவரது கணவருக்கு திதி கொடுக்க கூட்டி வந்து இருந்தார். அந்த சமயம் தேவி ஃபோனில் பேசுவதை கவனித்த ரம்யா என்ன விஷயம் என்று விசாரித்தார். தேவி ஃபோனை எடுத்து பார்த்ததில் பார்த்திபன், பிரியா நிச்சய போட்டோவை பார்த்து கோவம் கொண்டார். தன் அம்மாவையும் திட்டி தீர்த்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author