Eeramana Rojave 2 Today Episode | 22.11.2022 | Vijaytv
eeramana Rojave 2. 22.11.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இங்கு தேடியும் காவ்யாவை கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் அவரை தேடி சென்றவர்கள் கோவிலுக்கு எமாற்றதோடு தான் வந்தார்கள். பொறுமை இழந்த அருணாச்சலம் கோவத்தில் கொந்தளித்தார். நான் காவ்யாவை என் மகளாக நினைத்து தான் இத்தனை நாள் நடத்தினேன். ஆனால் அவள் என் மகனையும் மதிக்கவில்லை. எங்களையும் இப்படி உறவினர்கள், நண்பர்கள் முன் அசிங்படுத்திவிட்டு கிளம்பி இருக்கிறாள் என்று கூறினார். இனியும் இந்த கல்யாணம் நடக்காது என்றார். அந்த நேரம் அங்கு வந்த தேவி அவருக்கு 60வது கல்யாணத்துக்கு வாழ்த்து கூறினார். ஆனால் யார் முகத்திலும் சந்தோசம் இல்லை என்பதை கவனிதார். அப்போது ஐஸு அவர்கள் திருமணம் நின்றுவிட்டது. அதற்கு காரணம் காவ்யா என்று கூறினார். இதை கேட்ட தேவி, மேலும் அவர்களை காயப்படுத்தும் வகையில் பேசினார். இந்த அவமானம் உனக்கு தேவை தான். என்னையும் என் மகளையும் ஏமாற்றி, துரோகம் செய்ததற்கு இது உனக்கு கடவுள் கொடுத்த அடி என்றார். பின் அருணாச்சலம் வந்தவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு கிளம்பினார். பார்த்திபன் காவ்யா மீது உள்ள கோவத்தை அவரது மாமனார் மாமியார் இடம் வார்த்தையால் கொட்டினார். வீட்டுக்கு வந்தும் கூட காவ்யா இன்னும் வீடு திரும்பவில்லை என்பதால் வீட்டில் அனைவருமே ஒன்றும் புரியாமல் நின்றார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…..