Eeramana Rojave 2 Today Episode | 23.03.2022 | Vijaytv
Eeramana Rojave 2. 23.03.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா மரியம் சிஸ்டர் வந்து இருப்பதால் அவரை பார்க்க வேண்டும் என்று தனியாக மண்டபத்திற்கு வெளியே வந்தார். அவர் ரொம்ப நேரம் ஆகியும் வரவில்லை என்று பதட்டமாக காவ்யா காத்திருந்தார். ஆனால் பிரியா போனதில் இருந்து திரும்பியும் வரவில்லை அவரது ஃபோனையும் எடுக்க வில்லை. பிரியாவை அழைக்க அவரது அம்மா மணமகள் அறைக்கு வந்தார். வந்ததும் பிரியாவை காணவில்லை என்று காவ்யா பதட்டமாக கூறினார். மண்டபம் முழுவதும் தேடிவிட்டதாகவும் கூறினார். இதனால் அழுது புலம்பிய மஹா, உடனே காவ்யா அப்பா விடம் விஷயத்தை சொல்ல அழைத்தார். பின் அருணாச்சலம், பார்வதி, பார்த்திபன் என்று வரிசையாக ஒவ்வொருவராக விஷயம் தெரிய ஆரம்பித்தது. பிரியாவை யாரோ கடத்தி இருப்பார்கள் என்று மஹா பதட்டத்தில் புலம்பினார். அந்த நேரம் துரை ஃபோனுக்கு பிரியா ஒரு செய்து அனுப்பினார். அவர் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், அதை சொல்ல முயற்சித்ததாகவும், அது முடியவில்லை அதனால் நா அவருடன் செல்கிறேன் எனவும் அதில் இருந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…