Eeramana Rojave 2 Today Episode | 23.03.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியாவை மண்டபத்தில் காணவில்லை என்று அங்கு இருந்த அனைவருக்கும் தெரிய வந்தது. பிரியா யாருடனோ ஓடி போய் விட்டதாக அனைவரும் நினைக்க ஆரம்பித்தார்கள். ஆனால் பார்த்திபன் இதை நம்பவில்லை. பிரியா இப்படி ஒரு வேலையை செய்ய மாட்டார் என்று நம்பினார். அவருக்கு கண்டிப்பாக எதோ அசம்பாவிதம் நடந்திருக்கும் என்று நினைத்தார். தேவி இந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார். என் பொண்ணை வேண்டாம் என்று இப்படி ஒரு தரம் கெட்ட பெண்ணை பார்த்து உள்ளாய் என்று பேசினார். ஜீவா தான் பிரியாவை தெடிச்செல்கிரேன் என்று கூறி மண்டபத்தில் இருந்து கிளம்பினார். காவ்யா என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தார். நம் குடும்பத்தால் அருணாச்சலம் தலை குனியும் நிலை வந்து விட்டதே என்று வருந்தினார் துரை. இதற்கு எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author