Eeramana Rojave 2 Today Episode | 23.06.2022 | Vijaytv
eeramana Rojave 2. 23.06.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா செல்லும் பேருந்தில் பார்த்திபனும் ஏறி போகும் வழியில் காவ்யாவை ரசித்த படியே சென்றார். அப்போது ஒருவர் அங்கு இருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தார். அதை கவனித்த காவ்யா உடனே அந்த ஆளை எழுப்பி அறைந்து உடனே அந்த பேருந்தை விட்டு வெளியே அனுப்ப வைத்தார். பார்த்திபனும் அதில் பெருமை. அருகில் இருந்தவர்களிடம் அது என் மனைவி தான் என்று பெருமையாக கூறினார். அதே நேரம் ஜீவா பிரியா இருவரும் சேர்ந்து குழந்தைகளுடன் பேருந்தில் கிளம்பினார்கள். ஆட்டம் பாட்டம் என அனைவரும் சந்தோசத்தில் துள்ளி குதித்து வந்தார்கள். பின் அந்த இடத்துக்கு போய் சேர்ந்ததும் ராட்டினதில் போகலாம் என்று தயார் ஆனார்கள். ஆனால் பிரியா தனக்கு பயம் என்பதை ஏறி அமர்ந்த பின் ஜீவா விடம் கூறினார். பயதில் ஜீவாவை கட்டி பிடித்துகொண்டு இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…