ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, தேவி தன்னை அழைத்து பேசியதை துரை அருணாச்சலம் இடம் கூறினார். அவரும் இவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். பின் அருணாச்சலம் உடனே அவர் அக்காவை பார்த்து பேசினார். இதெல்லாம் ரொம்ப தவறாக உள்ளது. ரம்யா சின்ன பொண்ணு, அவள் செய்யும் தவறை நீயும் செய்கிறாய் என்று கூறினார். ஆனால் தேவியும் ரம்யாவும் அது எதையுமே கேட்கவில்லை. அவர் நடிக்கிறார் என்று கூறினார் தேவி. அதனால் மனம் உடந்தார் அருணாச்சலம். உடனே பார்வதி இடம் நடந்ததை கூறினார். பார்வதியும் வீட்டில் நடக்கும் அனைத்தையும் பார்த்து வருந்தினார். ரம்யா நன் வளர்த்த குழந்தை, அவள் எப்படி இந்த மாதிரியான ஒரு பொன்னாக மாறினாள் என்று புலம்பினார். பார்த்திபனும் பிரியாவை shn பிடித்து உள்ளது அதை எதுகாக நான் பொய் சொல்ல போகிறேன் என்று புலம்பினார். இவர்கள் பேசுவதை ஜீவா வெளியில் இருந்து கேட்டார். உடனே ரம்யா விடம் பேச நினைத்தார். ரம்யா இவரை பார்த்ததும் எரிச்சலாக பேசினார். ஜீவா எதார்த்தத்தை புரிய வைக்க நினைத்தார். ஆனால் ரம்யா அதை கேட்கும் நிலையில் இல்லை. பார்த்திபன் மாமாவின் மனதை மாற்றி பார் என்று கூறினார். அடுத்த நாள் துரை முதல் பத்திரிக்கை கோவிலில் வைத்து அர்ச்சனை செய்தார். அப்போது பத்திரிக்கையில் நெருப்பு பட்டு எரிந்தது. ஆனால் பூசாரி அதை வெளியில் சொல்லமால் மறைத்தார். ஆனால் மனதில் எதோ பிரச்சனை உள்ளது என்று நினைத்துக்கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…