Eeramana Rojave 2 Today Episode | 25.08.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யாவின் கையில் இருந்த தீ காயத்துக்கு மருந்து வாங்க கிளம்பினார். காவ்யா தடுத்தும் அவர் நிறுத்த வில்லை. பின் காவ்யா தூங்கிய பின் அவருக்கே தெரியாமல் மருந்தை அவர் கையில் போட்டு விட்டார். பின் இந்த குடும்பத்துக்காக நீ சமைத்தது போல் கூடிய சீக்கிரமே என் காதலையும் ஏற்றுக்கொள்வார் என்று தனியாக பேசினார். மேலும் தன் காதல் முன் காவ்யா தினமும் தோர்க்க தான் போகிறார் என்றும் கூறினார். பின் அவர் தூங்கிய பின் தூங்குவது போல் நடித்த காவ்யா எழுந்து, பார்த்திபன் மேல் காதல் வந்து விடுமோ என்ற பயம் காவ்யாவுக்கே வந்தது. இதற்காகவே கூடிய விரைவில் இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று நினைத்தார். அதே நேரம் ஜீவாவிடம் லிங்கம் இபோது காவ்யா பார்த்திபன் இடம் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டார் அதே போல் நீயும் பிரியாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அன்று பிரியாவுக்கு காய்ச்சல், இருமல், வாந்தி என உடல் நிலை மோசமாக இருந்தது. அதை கவனித்த ஜீவா உடனே அவருக்கு தேவையானதை செய்ய ஆரம்பித்தார். சுடு தண்ணீர் போட்டு கொடுத்து மாத்திரை மருந்து கொடுத்து, அவருக்கு ஒத்தடம் கொடுத்து பிரியாவை இரவு முழுதும் தூங்காமல் பார்த்துக்கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author