Eeramana Rojave 2 Today Episode | 26.04.2022 | Vijaytv
eeramana Rojave 2. 26.04.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா யாரோ ஒருவருக்கு நடந்த கட்டாய திருமணத்தையே பிரித்துவிடுகிறாள், இதுவே காவ்யா ஜீவா காதல் விஷயம் தெரிந்தால் என்ன நடக்குமோ என்று பதறினார் மஹா. உடனே காவ்யாவுக்கு அழைத்து எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் பிரியாவுக்கு தெரிய கூடாது என்று கூறினார். அப்படி எதாவது நடந்தால் நான் அப்பா சக்தி மூவருமே தூக்கில் தொங்கி விடுவோம் என்று மிரட்டலாக பேசினார். ஆனால் காவ்யா தனக்கு தாலி கட்டிய நொடியே இறந்து விட்டதாகவும் இப்போது வெறும் உடம்பு மட்டும் தான் இருக்கிறது என்றும் கூறி கோவத்தில் ஃபோனை வைத்தார். அடுத்த நாள் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய சொந்தங்கள் கூடினார்கள். பிரியா கிளம்பி மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தார். பின் காவ்யாவை அழைத்து வர பிரியா மற்றும் மஹா இருவரும் சென்றார்கள். அங்கு காவ்யா கிளம்பிதான் இருந்தார். ஆனால் கழுத்தில் தாலியை காணவில்லை என்று பார்த்ததும் பதறினார்கள். அறை முழுவதும் தேடினார்கள். ஆனால் தாலி கிடைக்கவில்லை. காவ்யா தான் குளிக்க செல்லும்போது இங்கு தான் கழட்டி வைத்தேன் என்றார். அதை கேட்டு மஹா கோபம் கொண்டார், எப்படி தாலியை கழட்ட முடியும் என்று. பின் அவர்களை தேடி வந்த பார்வதிக்கு அந்த விஷயம் தெரிய வந்தது. அவரும் பதரிப்பொனார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…