ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, முதல் பத்திரிக்கை கோவிலில் வைத்து கும்பிட்ட கையோடு, அருணாச்சலம் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் துரை மாற்றும் அவரது மனைவி. இரு குடும்பமும் சந்தோசமாக பத்திரிக்கையை பரிமாறினார். கல்யாண ஏற்பாடுகள் நடந்தது. துரை அடுத்ததாக தாஸ் வீட்டுக்கு சென்று பத்திரிக்கை வைத்தார். சிரித்த முகத்தோடு பத்திரிக்கையை வாங்கினாலும், உள்ளே வன்மதொடு பேசினார். மீரா பத்திரிக்கையை பார்த்து எரிச்சல் அடைந்தார். தனக்கு பார்த்திபனை திருமணம் செய்து வைப்பதாக கூறிவிட்டு இப்போ வேறு யாரு திருமண பத்திரிக்கை வந்து உள்ளது என்று தாஸ் மீது கோவம் கொண்டார். இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்று எனக்கு தெரியும் என்று மீரா கத்தினார். அருணாச்சலம் வீட்டில் பத்திரிக்கையை பார்த்த தேவி, உடனே அதை கோவமாக பார்த்தார். எரிச்சல் அடைந்தார். உடனே அதை கிழித்தும் போட்டார். என் பொண்ணு படும் கஷ்டத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை என்று கதறினர். பத்திரிக்கையை கிழித்து அபசகுணம் ஆக்கினார். பின் நலங்கு வைக்கும் ஏற்பாடுகள் நடந்தது. பார்த்திபன் வீட்டில் அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள். அதை பார்த்த ரம்யா, நீங்கள் எல்லாரும் சந்தோசமாக இருக்கிறீர்கள் என்று நினைத்தார். தன்னை பற்றி யாருமே யோசிக்கவில்லை என்று கூறினார். அதனால் தான் சாக போவதாக கூறினார். உடனே தூக்க மாத்திரைகளை போட்டார். பார்த்திபன் இடம் வந்து நீங்க மட்டும் சந்தோசமாக இருங்க என்று கூறினார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். டாக்டர் அவரை பார்த்து விஷம் இரத்தத்தில் கலந்துவிட்டதாக கூறினார். முடிந்த அளவு முயற்சி செய்வதாக கூறினார். பார்த்திபன் பதட்டத்தில் உடனே ஜீவாவுக்கு அழைத்து விஷயத்தை கூறினார். அவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். தேவி தன் மகளின் நிலைக்கு நீங்கள் தான் காரணம் என்று அனைவரையும் திட்டினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…