Eeramana Rojave 2 Today Episode | 28.03.2022 | Vijaytv
eeramana Rojave 2. 28.03.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா காவ்யா இருவரும் மண்டபத்துக்குள் வந்து சேர்ந்தனர். அப்போது பார்த்திபன் காவ்யா கழுத்தில் தாலி கட்டினார். இதை பார்த்து பிரியா மற்றும் ஜீவா இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஜீவா கண்ணில் தன் காதலித்த காவ்யா கழுத்தில் அண்ணன் தாலி கட்டுவதை பார்த்து சுக்கு நூறாக உடைந்து போனார். காவ்யா ஜீவா கண்களை ஏக்கமாக பார்த்தார். என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் நின்றார்கள். பின் துரை பிரியாவை கோவமாக பார்த்தபடி வந்தார். அப்போது பிரியா தன்னை நரேன் கடத்தி விட்டதாக நடந்த அனைத்தயும் கூறினார். இதை கேட்ட குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பின் ஊர் காரர்கள் மணமேடை வரை வந்த பெண்ணை வீட்டுக்கு வெறும் கழுத்துடன் அனுப்புவது நல்லதல்ல என்று கூறினார்கள். அதனால் பிரியாவுக்கு இதே முகூர்த்தத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் உடனே மாப்பிள்ளைக்கு எங்கு போவது என்று துரை பயந்தார். இதை பார்த்த அருணாச்சலம் தன் மகன் ஜீவா பிரியா கழுத்தில் தாலி கட்டுவான் என்று கூறினார். இதில் உனக்கு சம்மதமா என்று கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…