Eeramana Rojave 2 Today Episode | 28.11.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தன் ஆதங்கத்தை கொட்ட காவ்யாவிடம் வந்து பேசினார். இந்த வீட்டில் உண்ணி பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியுமா? அதை இது நாள் வரை நான் நம்ப்வே இல்லை, ஆனால் இப்போது நீ செய்வதை பார்த்தால் எனக்கும் அந்த சந்தேகம் வருகிறது என்றார். நீ திருமணத்துக்கு முன் யாரையும் காதலித்தாயா? எப்படி எதுவும் இருந்தால் என்னிடம் சொல் நானே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன். ஆனால் அதற்காக பார்த்திபன் வாழ்க்கையை வீணாக்கி, இந்த வீட்டில் உள்ளவர்களை அசிங்கப்படுத்தும் விதமாக ந்தந்து கொள்ளாதே என்று கூறினார். மேலும் ந் தாலி எங்கே என்று கேட்டார். அதற்குள் பார்வதி அங்கு வந்து அந்த தாலியை நான் வாங்கிவிட்டேன் என்று பொய் சொல்லி சமாளித்தார். அதே நேரம் பார்த்திபன் இந்த வேதனை தாங்க முடியாமல் வீட்டிலே குடிக்க ஆரம்பித்தார். அதை பார்த்த ஜீவா அவருக்கு ஆறுதல் சொல்ல முயற்சி செய்தார். ஆனால் பார்த்திபன் எதையுமே கேட்கும் மனநிலையில் இல்லை. தான் காவ்யா மீது வைத்த காதல் அவளுக்கு புரியவே இல்லை. எப்போதும் வீட்டை விட்டு போவதற்கு தான் அவள் யோசனை செய்கிறாள். இப்போது நாம் அம்மா அப்பாவின் திருமணத்தை நிறுத்தி, நம் சொந்தங்கள், நண்பர்கள் முன் இப்படி ஒரு அவமானத்தை கொடுத்துவிட்டால். இனி அவளே வந்தாலும் எனக்கு அவள் வேண்டாம் என்று கூறினார். ஆனால் இப்போதும் ஜீவா காவ்யா பக்கம் என்ன நடந்தது என்று விசாரிக்க வேண்டும் என்று கூறினார். காவ்யா மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்து இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author