Eeramana Rojave 2 Today Episode | 29.03.2022 | Vijaytv
eeramana Rojave 2. 29.03.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் பிரியா வாழ்க்கையை பற்றி எனக்கும் அக்கறை இருக்கிறது. என் மகன் ஜீவா தானே அவளை காப்பாற்றி கூட்டி வந்தான். அப்போ ஜீவாவை பிரியா கழுத்தில் தாலி கட்ட வைப்பது என் பொறுப்பு என்றார். இதை கேட்ட துரை சந்தோசத்தில் அருணாச்சலத்தை கை கூப்பி நன்றி கூறினார். உடனே பிரியா விடம் வந்து பேசினார் துரை. உன் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்று அப்பா ஒரு முடிவு செய்துள்ளேன் என்று கூறினார். பின் ஜீவா வை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். பிரியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் யோசிக்க அவகாசம் கேட்டார் பிரியா. பின் நன்கு யோசித்து, ஜீவாவை கட்டாய படுத்தாமல் இருந்தால் எனக்கு சம்மதம் என்று கூறினார் பிரியா. உடனே ஜீவா சம்மதம் கேட்க அருணாச்சலம் பேசினார். பிரியாவை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் ஜீவா அப்படி திருமணம் செய்ய முடியாது என்று கூறினார். அருணாச்சலம் எவளவோ சொல்லியும் ஜீவா கேக்கவில்லை. உடனே ஆர்திபன் இடம் உதவி கேட்டார் அருணாச்சலம். பார்த்திபனும் ஜீவாவிடம் பேசி பார்க்க முடிவு எடுத்தார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…