Eeramana Rojave 2 Today Episode | 29.04.2022 | Vijaytv
eeramana Rojave 2. 29.04.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவின் தாலியை காணவில்லை என்று குடும்பமே சேர்ந்து தேடினார்கள். இங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் தேவி தனக்கு சாதகமாகவே எல்லாம் நடப்பதாக நினைத்தார். பின் காவ்யாவை நிக்கவைத்து கேள்விகளை அடுக்கினார். எப்படி தாலியை கழற்றி வைத்தாய். யாருமே அப்படி செய்ய மாட்டார்கள் என்று கூறினார். உனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை ஆனாலும் உன் அம்மா அப்பா சொன்னதால் மட்டுமே இந்த திருமணத்தை செய்து கொண்டாய் என்று கேட்டார். அதற்கு காவ்யா ஆமாம் எங்ககு விருப்பம் இல்லாமல் தான் திருமணம் செய்தேன் என்றார். மேலும் காவ்யாவை எப்படியாவது இந்த வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து பல கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டார். மேலும் உனக்கு விருப்பம் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டாம், என்னிடம் தைரியமாக சொல்லலாம் என்றார். ஆனால் அதற்குள் அனிதா குட்டி தாலியை கண்டு பிடித்து எடுத்து வந்தார். துணியோடு துவைக்க இருந்தது எனவும் கூறினார். ஆனாலும் தேவி தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார். பின் காவ்யா இந்த வீட்டில் அருணாச்சலம் மற்றும் பார்வதிக்கு மருமகளாக தான் விருப்பம் என்று கூறினார். இதனால் குடும்பத்தில் அனைவர் முகத்திலும் ஒரு தெளிவு வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…