Eeramana Rojave 2 Today Episode | 30.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 30.05.2022

eeramana Rojave 2. 30.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் இருவரும் கோவிலுக்கு கிளம்பி வந்தார்கள். அங்கு பார்த்திபன் பெயரில் அர்ச்சனை செய்தார் காவ்யா. பார்த்திபனின் ராசி நட்சத்திரம் அனைத்தையும் கூறினார். அதை ஆச்சர்யமாக பார்த்தார் பார்த்திபன். பின் சாமி கும்பிட்டு விட்டு அங்கு அமர்ந்து பேசினார்கள். அப்போது காவ்யா தனக்கு பார்த்திபன் மேலும் தன் மாமனார் மாமியார் என்று அனைவர் மேலும் பெரிய மரியாதை மற்றும் அன்பும் இருப்பதாக கூறினார். நீங்கள் எங்கள் குடும்பத்துக்கு செய்த விஷயம் ரொம்ப பெரியது என்று நன்றி கூறினார். மேலும் தனக்கு கிடைக்கும் இந்த பாசமும் அன்பும் தன் தகுதிக்கு மீறியது என்று கூறினார். உங்களுக்கு மனைவியாக இருக்க தனக்கு தகுதி இல்லை என்றார். மேலும் இந்த வாழ்க்கையை தான் எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார். இதனால் பார்த்திபன் வாழ்க்கையும் வீணாக கூடாது என்று நினைத்தார். அதை நேரடியாக பார்த்திபன் இடம் கூறினார். உடனே இந்த விவாகரத்து பாத்திரத்தில் கை எழுத்து போடும்படி கூறினார். பார்த்திபன் இது ஒரு அவசர முடிவு, இப்படி திருமணம் ஆன சில நாட்களில் இப்படி ஒரு முடிவு எடுப்பது சரி இல்லை என்றார். ஆனாலும் காவ்யா வற்புறுத்தியதால் அவரும் கைஎழுத்து போட்டார். ஆனால் அதற்கு அவரும் ஒரு நிபந்தனை விதித்தார். தன்னோடு இந்த வீட்டில் 6 மாதம் ஒரு நண்பர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு காவ்யாவும் ஒத்துக்கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author