Eeramana Rojave 2 Today Episode | 30.07.2022 | Vijaytv
eeramana Rojave 2. 30.07.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா தூங்குவதை பார்த்து ரசித்தார். அந்த நேரமங்கு இருந்த மருதாணியை பார்த்ததும், அவரே காவ்யாவின் கையில் மருதாணி வைக்க முடிவு செய்தார். மேலும் அவர் தூக்கத்தில் இருக்கும்போது காவயாவுக்கே தெரியாமல் அவரது கையில் மருதாணி வைத்து விட்டார். அதை ரசித்துவிட்டு பின் அவரும் தூங்கினார். அதே போல் காலையில் எழுந்ததும் காவ்யாவுக்கு அவரே காபி போட்டு கொடுத்தார். ஆனால் காவ்யா அவர் கையில் மருதாணி இருப்பதை பார்த்து கோவத்தில் இருந்தார். இது கண்டிப்பாக பார்த்திபன் வேலையாக தான் இருக்கும் என்று. ஆனால் கோவத்தில் அரையாமல் பொறுமையாகவே பேசினார். தேவி கடந்த 10 வருடமாக நடக்கும் கணக்கு வழக்குகளை பற்றி கேட்டு இருந்ததால் அருணாச்சலம் அதை சரி பார்த்துக்கொண்டு இருந்தார். தேவி அந்த நேரம் அங்கு வந்து காசு விஷயத்தில் என்னை ஏமாற்றலாம் ஆனால் என் மகனை ஏமாற்ற முடியாது என்று கூறினார். இதனால் கோவத்தில் அருணாச்சலம் என் மீது சந்தேகம் கொள்ள எப்படி உனக்கு மனசு வந்தது என்று கேட்டார். மேலும் நானும் இந்த கம்பேனியில் ஒரு பார்ட்னர் தான் என்றார். ஆனால் அதற்கும் தேவி, இந்த கம்பேனியில் எந்த முடிவையும் எடுக்க எனக்கு தான் உரிமை உண்டு. அதை என் மகனிடம் ஒப்படைக்க போகிறேன். மேலும் அவன் தான் முடிவு செய்ய வேண்டும், உன்னை பார்ட்னராக வைக்க வேண்டுமா இல்லை அனுப்ப வேண்டுமா என்று குதற்கமாக பேசினார். அதற்கு பார்வதி கோபப்பட்டார். இந்த கம்பேனிக்காக என் கணவரும், என மகன்களும் மாடாக உழைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால் தேவி அதை பற்றி பேச உனக்கு உரிமை இல்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..