Eeramana Rojave 2 Today Episode | 31.03.2022 | Vijaytv
eeramana Rojave 2. 31.03.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியா திருமண வேலைகள் ஆரம்பம் ஆனது. திருமணத்துக்கு முன் பிரியா ஜீவாவை பார்த்து பேசி இருந்தார். காலை வரை அண்ணன் மனைவியாக பார்த்ததும் இப்போது மனைவியாக பார்த்ததும் காலத்தின் செயல். ஆனால் உங்கள் மனதில் வேறு யாரும் இருந்தாலோ அல்லது விரும்பினாலோ அல்லது இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலோ உடனே வெளிப்படையாக பேசும்படி கூறினார் பிரியா. ஆனால் ஜீவா எதையுமே வாயை திறந்து சொல்லவில்லை. சொன்னாலும் அதை மாற்ற முடியாது, எப்படியும் பார்த்திபன் கட்டிய தாலி காவ்யா கழுத்தில் இருப்பதால் அவர் அதை பற்றி சொல்லவில்லை. இந்த பேச்சு வார்த்தைக்கு பின் திருமணம் முடிந்தது. ஜீவா பிரியா கழுத்தில் தாலி கட்டும் நேரம் காவ்யா சுக்கு நூறாக நொறுங்கி போனார். பின் குடும்ப புகைப்படம் எடுக்க இரண்டு மணமக்களையும் அழைத்தார்கள். காவ்யா தலை வலி என்று வரவில்லை என்றார். ஆனாலும் விடாமல் அழைத்து அனைவரும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்தார்கள். ஆனால் காவ்யா தன்னை விட்டு விலகி செல்வதை பார்த்திபன் கவனித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…..