எதிர் நீச்சல் மதுமிதா கார் விபத்து சர்ச்சைகள், உண்மையில் நடந்தது தான் என்ன?
எதிர் நீச்சல் மதுமிதா அவர்கள் குடித்து விட்டு காரை ஓட்டி ஒரு காவலரை இடித்து விட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வந்தது. அதன் உண்மை தன்மை குறித்து இங்கு பார்க்கலாம்.
சோழிங்க நல்லூரில் குறுகிய ஒரு வழிப் பாதையில் வேகமாக வந்த மதுமிதாவின் கார் ஒரு காவலரை இடித்து இருக்கிறது. காவலர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மதுமிதாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வளவு தான் நிகழ்ந்த விடயங்களாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த நிகழ்வு நடந்த ஒரு சில நிமிடத்திற்குள் ‘எதிர் நீச்சல் மதுமிதா குடித்து விட்டு வாகனத்தை ஓட்டி, காவலரை இடித்து விட்டதாகவும், அந்த காவலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்’ எனவும் செய்திகள் வேகமாக இணையத்தில் பரவியது.
இது குறித்து காவல்துறை தரப்பு கூறிய போது விபத்து நடந்ததும் உண்மை, வேகமாக மதுமிதாவின் கார் வந்து காவலரை இடித்ததும் உண்மை. ஆனால் மதுமிதா குடித்து விட்டு வாகனம் ஏதும் ஓட்டவில்லை. கார் வந்தது ராங் ரூட், ஒரு வழிப்பாதை மற்றபடி ஏதும் இந்த வழக்கில் சொல்லும்படியாக இல்லை என கூறி இருக்கின்றனர்.
எதிர் நீச்சல் மதுமிதாவும் சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ‘விபத்து நடந்தது உண்மை தான், ஆனால் அது ஒரு சிறிய விபத்து, காவலர் நலமுடனே இருக்கிறார், குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி விட்டதாக பரவி வரும் செய்திகள் எல்லாம் தவறானது, யாரும் நம்ப வேண்டாம்’ என கூறி இருக்கிறார்.
“ ஒரு சென்சேசனல் செய்தி கிடைத்து விட்டால், அதை இன்னும் சென்சேசனலாக ஆக்குவதற்கு தற்போது ஒரு சில வதந்திகள் அதில் சேர்க்கப்படுகிறது, சமீபத்தில் வெளியான நடிகர் சிவக்குமாரின் சால்வை செய்தியும் அவ்வாறே திரிக்கப்பட்டது, உண்மை தன்மையை ஆராய்வதற்கே மீடியாக்கள், இனிமேல் ஆவது யாவினையும் ஆராய்ந்து செய்திகள் பதிவிடப்பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது “