முடிவடைகிறதா பிரபலமான எதிர்நீச்சல் சீரியல்?
Ethir Neechal Serial Going To End Details Here Idamporul
திரு செல்வம் அவர்களின் இயக்கத்தில், மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, நீலகண்டன், ஹரி ப்ரியா இசை என பலரும் நடித்து வரும் பிரபல எதிர் நீச்சல் சீரியல் முடிவடைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கிய இந்த எதிர் நீச்சல் சீரியல், தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 700 எபிசோடுகளை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமாக கருதப்பட்ட நடிகர் மாரிமுத்து திடீர் உடல் நலக்குறைவால் மரணித்து விடவே, அவர் இடத்தை நிரப்புவது என்பது சீரியல் தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் கடினமாகவே இருந்தது.
ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவை என்ன தான் வேல ராமமூர்த்தி என்னும் மற்றுமொரு பெரிய கை ரீப்ளைஸ் செய்து இருந்தாலும் கூட, மாரிமுத்து அவர்கள் கொடுத்த ஒரு மிகப்பெரிய இம்பேக்டை வேல ராமமூர்த்தி அவர்களால் கொடுக்க முடியவில்லை. இதனால் சீரியலின் டிஆர்பியும் வெகுவாக சரியவே, எதிர் நீச்சல் குழு சீரியலை முடிக்க திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து எதிர் நீச்சல் ரசிகர்கள், எதிர் நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்ய ப்ரியா அவர்களின் இன்ஸ்டா பதிவின் கமெண்டில் கேட்ட போது அவரும் அதற்கு சோகமாக இசைவு தெரிவித்து இருப்பதால், சீரியல் முடிவடைய போவது உறுதியாகி இருக்கிறது.
மேலும் எதிர் நீச்சல் சீரியலில் ஆதிரையாக நடித்து வரும் சத்யா தேவராஜனும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ‘Accept That Things End’ என பதிவிட்டு இருப்பதால் சீரியல் முடிவடைவது என்பது மேலும் மேலும் உறுதியாகி வருகிறது. கிட்டதட்ட 2 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்பதால் ரசிகர்களாளும் சரி, அதில் நடித்து வருகின்ற நடிகர்களாலும் சரி சீரியல் முடிவடைவதை சற்றே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
” சீரியலின் கடைசி எபிசோடு, ஜூன் 8 அன்று இருக்கும் எனவும் கூறப்படுகிறது, ஒரே ஒரு கேரக்டர் சரிந்ததும் ஒரு சீரியலே முழ்கடிப்பட்டு இருக்கிறது. மாரிமுத்து என்னும் நடிகனின் ஆளுமை சீரியலில் அப்படி இருந்து இருக்கிறது ‘’