குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ‘சோட்டா பீம்’ தொடருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா?
இன்று இந்திய குழந்தைகளுக்கு பிரதமரை கூட தெரியாமல் இருக்கும், ஆனால் சோட்டா பீமை தெரியாத குழந்தைகள் இருக்க வாய்ப்புகள் இல்லை, அந்த அளவுக்கு பேமஸ் ஆன சோட்டா பீம் அனிமேசன் சீரிஸ்க்கு பின்னால் இருக்கும் வரலாற்றை பார்க்கலாம்.
ஹைதராபத்தை சேர்ந்தவர் ராஜீவ் சீலகா, இவர் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் இஞ்சினியரிங் பயின்றவர். பின்னர் முசோரி பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் சைன்ஸ்சில் மாஸ்டர் டிகிரி முடித்தவர். முசோரியில் சாப்ட்வேர் இஞ்சினியராக தனது வாழ்க்கையை துவங்கிய ராஜீவ், அதில் நாட்டமில்லாமல் அதை விட்டு விட்டு கலிபோர்னியாவிற்கு சென்று அனிமேசன் கற்றார்.
அதற்கு பின்னர் சொந்தமாக ஒரு அனிமேசன் கம்பெனியை துவங்க நினைத்த ராஜீவ், ஹைதராபாத்தை மையமாக கொண்டு க்ரீன் கோல்டு அனிமேசன் என்ற கம்பெனியை துவங்கினார். இந்தியாவில் அந்த காலக்கட்டங்களில் அனிமேசன் என்பது அவ்வளவு பிரபலமாக இருக்கவில்லை. இவரது ஸ்க்ரிப்டகளும், அனிமேசன் சீரிஸ்களும் பல கம்பெனிகளால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் 2005 காலக்கட்டங்களில் இவரது ஐடியாவில் உருவான போங்கோ, கிருஷ்ணா உள்ளிட்ட கார்ட்டூன்கள், அப்போதைய பிரபலமான கார்ட்டூன் நெட்வொர்க் சேனல்களில் ஒலிபரப்பாகி கொண்டு இருந்தது.
ஆனாலும் அந்த சீரிஸ்கள் அவர் எதிர்பார்த்த அளவிற்கு ரீச் ஆகவில்லை. காரணம் அன்றைய இந்திய அனிமேசன் உலகினை ஆங்கில புரொடக்சன் கம்பெனிகள் ஆண்டு கொண்டு இருந்தன. அவர்களுக்கு இணையான குவாலிட்டியை ராஜீவ் கொடுத்த போதும் கூட அவரது சீரிஸ்கள் அந்த அளவிற்கு ரீச் ஆகவில்லை. அதற்கு அடுத்த படியாக ராஜீவ் 2008 ஆம் ஆண்டு ‘சோட்டா பீம்’ என்ற கேரக்டரை வைத்து ஒரு அனிமேசன் கதையை வடிவமைத்து, அப்போதைய ‘போகோ’ சேனலுக்கு அனுப்பி வைக்கிறார்.
அவர்களும் முதலில் மறுத்து விட்டு பின்னர் ஒப்புக் கொண்டு ராஜீவ் அவர்களின் சோட்டா பீம் தொடரை ஒலிபரப்ப முடிவெடுக்கின்றனர். ஆரம்பத்திலேயே சோட்டா பீம் எபிசோடுகள் மந்தம் அடிக்க, போகோ சேனலோ, ராஜீவ் அவர்களிடம், வேண்டுமானால் இந்த தொடரை நிறுத்திக் கொள்வோமா, என கேட்டு இருக்கிறது. தளராத ராஜீவ் தொடர்ந்து தனது கண்டண்டுகளின் மீது நம்பிக்கை வைத்து ஒலிபரப்புங்கள் எனக்கு வேண்டுமானால் நீங்கள் பணமாக எதுவும் தர தேவையில்லை என கூறி இருக்கிறார். ஆனாலும் அதற்கு அடுத்தடுத்த எபிசோடுகளில் ‘சோட்டா பீம்’ தொடருக்கு தாறுமாறான வரவேற்பு கிடைத்து இருக்கிறது. பிற சில ஆங்கில அனிமேசன் தொடர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி ராஜீவ்வின் ‘சோட்டா பீம்’ விஞ்சி நின்று இருக்கிறது.
அன்று ஆரம்பித்த வளர்ச்சி தான், சோட்டா பீம் சோட்டா பீமாகவே இருந்தாலும், அன்று ராஜீவ் தைரியமாக ஆரம்பித்த க்ரீன் கோல்டு நிறுவனம் இன்று அசாத்தியமாக இந்தியாவின் டாப் 5 அனிமேசன் நிறுவனங்களாக வளர்ந்து நிற்கிறது. தொடர்ந்து குழந்தைகளுக்கு பிடிக்கும் அனிமேசன் தொடர்களை தயாரித்து வருகிறது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற முன்னனி நிறுவனங்களுடன் இணைந்து பல அனிமேசன் தொடர்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
” தோலக்பூர் என்னும் மாயை உலகம், அதில் வசிக்கும் லட்டு பிரியன் சோட்டா பீம் அவனும் அவனது நண்பர்களும் இணைந்து அவர்களின் கிராமத்தில் இருக்கும் பிரச்சினைகளை எப்படி கையாளுகிறார்கள், என்ற ஒரு சிறு குறுங்கதையை எடுத்துக் கொண்டு கிட்டதட்ட 15 வருடங்கள் குழந்தைகளின் மனதிற்குள் எந்த வித போட்டியும் இன்றி கொடிகட்டி பறக்கிறார் ராஜீவ் சீலகா “