காற்றுக்கென்ன வேலி இன்றைய எபிசோடில், சூர்யா மீனாட்சியின் அழைப்புகளை எடுக்காமல், வகுப்பை தொடர அபியும் ஆனந்தியும் கடுப்பாகிறார்கள். இன்னொரு பக்கம் மீனாட்சிக்கு இது மிகுந்த கோபத்தை அளிக்கிறது. சூர்யா தன் கையை விட்டுப் போகிறார் என்பதை உணர்ந்த அவர், சூர்யாவை பார்க்க கல்லூரிக்கே செல்கிறேன் என கிளம்புகிறார். ஆனால் அதற்கு முன் மயக்கம் அடைகிறார்.
மகாதேவன் வகுப்பிற்கு வந்து சூரியா, அபி மற்றும் ஆனந்தியை தன்னுடன் விவரங்களைக் கூறி அழைத்து செல்கிறார். மீனாட்சியின் உடல்நலத்தை பற்றி எண்ணியும் குற்ற உணர்ச்சியிலும் சூர்யா இருக்கிறார். இந்த நேரத்தை பயன்படுத்தி மீனாட்சி சூர்யாவிடம் திருமணம் செய்யுமாறு கேக்க, அவரும் ஒத்துக்கொள்கிறார். மகாதேவன் அதிர்ச்சி அடைகிறார். இதை கேட்ட வெண்ணிலாவுக்கும் பெரும் அதிர்ச்சி.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.