Kaatrukkenna Veli today episode 03.09.2021 review

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, வெண்ணிலா அபியிடம் அவரது பெரியம்மாவை பற்றி கேட்க அபி மிகவும் கோபப்படுகிறார். வெண்ணிலா தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது சாரதாவிடம் போட்டு கொடுக்கத்தான் என கத்துகிறார்.

பின்னர், சூர்யாவின் வகுப்பில் வெண்ணிலா சிறிதளவும் கவனம் செலுத்தாமல் இருந்து பாரதியாரின் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். சூர்யா கேட்ட கேள்விக்கு அவரால் பதில் கூற முடியாததைக்கண்டு நண்பர்களே அதிர்ச்சி அடைகிறார்கள். கடைசியாக, நண்பர்கள் சேர்ந்து வெண்ணிலா விடும் பேச முயற்சிக்க அவரோ எதையும் கூற மறுக்கிறார். சூர்யா வெண்ணிலாவை அழைத்து படிப்பில் கவனம் செலுத்துமாறு கூற, இருவருக்குமிடையே இருக்கும் விரிசல் மேலும் விரிவடைகிறது. நண்பர்கள் அங்கு வந்ததால் வெண்ணிலாவில் சூர்யாவிடம் மனம் விட்டு பேச முடியவில்லை. இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author