காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று பழைய சாரதா நடிகை மாளவிகாக்கு பதிலாக புதுசாக ஜோதி ராய் வந்துள்ளார். குழப்பமாக இருக்கும் வெண்ணிலாவுக்கு, இன்றைய எபிசோடில் சாரதா ஆறுதல் கூறுகிறார். வெண்ணிலாவுக்கும் சற்றே தெளிவும் கிடைக்கிறது. படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்கிறார்.
இன்னொரு பக்கம் சூர்யாவிற்கு குழப்பங்கள் அதிகரித்து உணவைக்கூட அவர் உண்ண மறுக்கிறார். மீனாட்சி அடுத்த நாளே சூர்யாவின் நிச்சயதார்த்தம் எனக்கூற, சூர்யாவின் குழப்பம் அதிகரிக்கிறது. திருமணம் வேண்டாம் என சொல்லுமாறு மகாதேவன் கூறிய பொழுதும், சூர்யா மீனாட்சியின் உடல்நிலையை காரணம் காட்டி அதை மறுக்கிறார். வேதனையில் மகாதேவனும் பானுவும் இருக்க சாரதாவின் உதவியை நாட மகாதேவன் முடிவுசெய்து கிளம்புகிறார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்