காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று வெண்ணிலா இன்னமும் குழப்பத்தோடு இருக்க ரூபா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர், சூர்யாவின் நிலையைக் கண்டு வருந்தும் சிவானந்தம் அவரிடம் மீனாட்சியுடன் திருமணத்தைப் பற்றி பேசுவதாக கூறுகிறார். மகாதேவன் தன் வருத்தத்தையும் நடக்கும் விஷயங்களையும் கூற சாரதா தன்னால் என்ன செய்ய முடியும் என திகைக்கிறார். மகாதேவனோ “நீ நினைத்தால் முடியும். ஏதாவது ஒன்று செய்” என கூறுகிறார்.
சூர்யாவின் திருமணத்தை தள்ளிப் போடலாமா என சிவானந்தம் மீனாட்சியிடம் கேட்க, அவரோ சாரதா வெல்லக்கூடாது, தானே வெல்லவேண்டும் அதற்காகவே இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும் எனக் கூறுகிறார்.
கடைசியாக, காலையில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, மகாதேவன் சூர்யாவிடம் இப்போது இதை நிறுத்திவிட வேண்டும் எனக்கேட்கிறார். அவர் அப்பொழுதும் வேறு வழி இல்லை நான் இதை செய்தே ஆக வேண்டும் என கூறுவதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்