Kaatrukkenna Veli today episode 08.09.2021 update

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று சாரதாவின் வருகை மீனாட்சியை மிகவும் அதிர்ச்சி ஆக்கிறது. ஒருவழியாக மனதை சரிசெய்துகொண்டு அவர் கீழே வருகிறார். பத்திரிகையில் கூட மீனாட்சி மற்றும் சிவானந்தம் பெயரை தான் சூர்யாவின் பெற்றோர் என போட்டிருப்பதை பார்த்து மகாதேவன் அதிர்ச்சியாகிறார்.

பின்னர், அந்தப் பத்திரிக்கையை கையில் எடுத்து சாரதா பேச தொடங்குகிறார். மீனாட்சி அதை தடுக்க நினைக்க, சாரதா அவரையும் வாய் பேச முடியாமல் தடுத்து, அவரது கருத்துக்களை முன்வைக்கிறார். மகாதேவனின் பெயரையும் தன் பெயரையும் போட்டிருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். பின்னர், சூர்யாவிற்கு திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா என்பதை கேட்டிருக்க வேண்டும் என கூறுகிறார். மீனாட்சி சூர்யாவிடம் திரும்பிப் பார்க்க, இது தான் சரியான சமயம் என சூர்யா அமைதியாக இருந்துவிடுகிறார்.

பின்னர், பெண் வீட்டார் சூழ்நிலையை புரிந்துகொண்டு இந்த திருமணத்தில் தங்களுக்கு விருப்பமில்லை என கூறுகிறார்கள். மீனாட்சி மற்றும் அவரை சார்ந்தோர் கோபமாக இருக்க, இன்றைய எபிசோடு முடிவடைகிறது. மேலும் விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்

About Author