பெரியம்மாவை எதிர்க்கும் சூர்யா? Kaatrukkenna Veli today episode 13.09.2021 update
Kaatrukenna Veli Surya Anandhi
காற்றுக்கென்ன வேலியில் இன்று சூர்யாவும் வெண்ணிலாவும் மேலும் வாக்குவாதம் செய்கிறார்கள். சூர்யா “இனி என்னிடம் பேசாதே” என கூற, வெண்ணிலாவும், சூர்யா வந்து பேசும் வரை பேசமாட்டேன் என கூறுகிறார். மகாதேவனிடம் சாரதா தான் சென்னைக்கு வந்து சூர்யாவின் அருகிலேயே இருக்கப் போவதாக கூறுகிறார். மகாதேவன் இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார்.
மீனாட்சி வீட்டில் அனைவரிடமும் வெண்ணிலா ஒரு பெரிய ஆபத்தாக உருவாகலாம் என தோன்றுகிறது என கூறுகிறார். வெண்ணிலாவும் சூர்யாவும் தங்களது சண்டையை தொடர்கிறார்கள். இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
எப்படியாவது சூர்யாவை ஊரை விட்டு அனுப்பி விடுவோம் என முடிவு செய்யும் மீனாட்சி, அவரை ஈரோட்டுக்கு போக சொல்கிறார். அவரோ தான் கோழை அல்ல எனவும், சாரதாவுக்கு பயந்து ஓட மாட்டேன் எனவும் கூறுகிறார்.
கடைசியாக மாதவன் முன்பு பார்த்த அதே போலீசிடம் மாட்டி திட்டு வாங்குவதோடு இன்றைய எபிசோடு முடிகிறது