அபிக்கு மூக்கு உடைந்தது! – Kaatrukkenna Veli today episode 15.09.2021 update
Kaatrukkenna Veli Abhi Vennila Surya
காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, மாறன் மாநில அளவிலான ஓட்ட போட்டிக்கு தேர்வானதை பற்றி சூர்யா பெருமையோடு அறிவிக்கிறார். மாணவர்கள் மகிழ அபியும் ஆனந்தியும் கடுப்பாக அமர்ந்திருக்கிறார்கள். பின்னர், வெண்ணிலா அப்பா சம்பாதித்த பணத்தை விட தனது திறமை எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை பற்றி அபிக்கு கூறுகிறார். அபி மூக்கு உடைக்கப்பட்டு எதுவும் பேச முடியாமல் இருக்கிறார்.
சௌமியா, மாதவனுடைய நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொண்டு, அவரிடம் கேள்விகள் கேட்கிறார். மாதவன் சமாளிக்க முயற்சி செய்கிறார். வீட்டிலும் சூர்யா குழப்பமாக அமர்ந்திருக்க, மீனாட்சி அவரிடம் எல்லா பிரச்சினைக்கும் காரணம் சாரதாதான் எனக்கூறி அவரை மனம் மாற்றம் செய்ய பார்க்கிறார். அபியும் ஆனந்தியும் புதிதாக ஒரு திட்டம் தீட்டுகிறார்கள்.