சூர்யாவின் கரிசனம்! Kaatrukkenna Veli today episode 24.09.2021 review
Kaatrukkenna Veli Surya Vennila
காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று மாறனின் தந்தை மூர்த்தி வெண்ணிலாவிடம் அவர்களைப் பற்றிய உண்மையை வெளியில் காட்டி கொள்ள வேண்டாமென கேட்டுக் கொள்கிறார். வெண்ணிலா அவரின் பாசத்தை பார்த்து வியந்து போகிறார்.
பின்னர், ரூபா சௌம்யாவிடம் வெண்ணிலா தாக்கப்பட்ட செய்தியை தெரிவிக்க, அவர் அதிர்ச்சியாகிறார் மாதவன் சௌமியாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார்.
மாறனுக்கு விழிப்பு வருகிறது. தனது கால் உடைக்கப்பட்டு இருப்பதையும் கட்டுப்போட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ந்து போகிறார். தனது நிலையை கண்டு வருந்துகிறார். சாப்பிடவும் மறுக்கிறார். அப்பொழுது சூர்யா அங்கு வந்து அவருக்கு உத்வேகம் தரும் வகையில் பேசுகிறார். அவருக்கு உணவை ஊட்டி விடுகிறார்.