காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, சூர்யாவும் வெண்ணிலாவும் ஒன்றாக வெளியே போய் வந்ததை அபியின் நண்பர்கள் அபியிடம் கூற அபி அதிர்ச்சி அடைகிறார். பின்னர் சூர்யாவுக்காக மீனாட்சி காத்திருக்க, சூர்யா வந்தபிறகு மீனாட்சியிடம் பொய் கூறுவதை பார்த்து அபி மேலும் அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பின்னர் மீனாட்சியிடம் அபி உண்மையை கூற, மீனாட்சி அவரை சமாதானம் செய்து விட்டாலும் மனதில் குழப்பம் அடைகிறார். அதனால் சிவானந்தத்திடம் பேசி சூர்யாவின் திருமணத்தை விரைவுபடுத்த முயற்சிக்கிறார்.

இன்னொரு பக்கம் மாதவன் தனது மனதில் இருக்கும் வெறுப்பில் வெண்ணிலாவின் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து வாசிகளிடம் வெண்ணிலாவை பற்றி தவறாக கூறுகிறார். அங்கு அதைவைத்து வெண்ணிலா குடும்பத்தில் வாக்குவாதங்கள் எழுகின்றன.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author