Mahanadhi Serial Today Episode | 03.07.2023 | Vijaytv

mahanadhi. 03.07.2023

mahanadhi. 03.07.2023

மகாநதி தொடரில் இன்று, நிவின் காவேரியை பார்க்க வேண்டும் என்று அவரது அறை ஜன்னலில் எட்டிப்பார்த்தார். ஆனால் அதை யமுனா பார்த்து தன்னை பார்க்க தான் வந்து இருப்பார் என்று அவரே நினைத்துக்கொண்டார். இதனால் அனைவரும் தூங்கிய பின் நீவினை பார்க்க தனியாக வெளியே சென்றார். போன இடத்தில் நிவின் இடம் பேசினார். தன்னை அழைத்தது போல் இருந்தது என்று கூறினார். ஆனால் நிவின், உன்னை எதற்கு இந்த நேரத்தில் அழைக்க போகிறேன் . அதெல்லாம் ஒன்றும் இல்லை போய் படு என்று கூறினார். யமுனாவும் அவரது அறைக்கு சென்றார். பின் காவேரி நிவினை பார்க்க வெளியே வந்தார். நிவின் கொஞ்ச நேரம் என்னோடு பேசிக்கொண்டு இருக்குமாறு கூறினார். அப்போது திருமணம் பற்றி பேசினார் நிவின். அதற்கு காவேரி, இப்போதைக்கு எனக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை. என் குடும்ப சூழ்நிலை என்ன என்று உனக்கே தெரியும். அம்மா, பாட்டி, தங்கைகள் என்று அனைவரையும் நன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்பாவின் சொத்துக்களை மீட்க் வேண்டும் என்று கூறினார். அதற்கு தன முன்னுரிமை என்றும் கூறினார். நிவின் அதற்கு தாராளமாக காத்து இருப்பேன் என்று கூறினார். அடுத்த நாள் குமரன் கங்காவிடம் வெளியே செல்லலாம் என்று கூறினார். செலவு மொத்தமும் நனே செய்வேன் என்றும் கூறினார். கங்காவுக்கு ஒன்றும் புரியவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author