Mahanadhi Serial Today Episode | 05.05.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, நிவின் மற்றும் காவேரி ஊரை சுற்றி வருவதும், ஓடி பிடித்து விளையாடுவதும் என்று இருப்பது சரி இல்லை என்று ஜெயா கத்தினார். என் மகனை வலைத்துப்போட்டு பணம் சம்பாதிக்க நினைக்கிறீர்கள் என்று கொச்சையாக பேசினார். ஆனால் சாரதா என் மகளை பற்றி எனக்கு தெரியும். நிவின் இங்கு வருவது போவது எல்லாம் ஒரு ஒத்தாசையாக தான். அதை வைத்து இப்படி பேச வேண்டாம் என்று கத்தினார். கங்காவும் நிவினை கண்டிக்காமல் இங்கு வந்து கத்துவது சரி இல்லை என்று கூறினார். பின் ஜெயா கிளம்பியதும் காவேரிக்கு உடனே அழைத்து வீட்டுக்கு அழைத்தார்கள். வீட்டுக்கு காவேரி நிவின் உடன் வந்து இறங்கினார். அவர்களை வெளியே நிற்கவைத்து சாரதா, கங்கா குமரன் மூவரும் பேசினார்கள். இனி காவேரி நிவின் உடன் பேசுவது பழகுவது எதுவும் இருக்க கூடாது என்று கூறினார். அதே போல் நிவின் இனி இந்த வீட்டுக்கு வருவதை நிறுத்திவிடுங்கள் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author