மஹாநதி தொடரில் இன்று, கங்கா குமரனுக்கு சாப்பாடு கொண்டு வந்து பரிமாறினார். அப்போதும் நிவினும் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று குமரன் அவரையும் அமரவைத்தார். ஆனால் அப்போது தெரியாமல் நிவின் கை பட்டு சாம்பார் எல்லாம் கங்கா மீது கொட்டிவிட்டது. இதனால் கங்கா அங்கிருந்து கிளம்பிவிட்டார். பின் எப்போதும் போல் குமரன் கடையில் தான் சாப்பிட்டார். அன்று குமரன் மற்றும் காவேரி இருவரும் சேர்ந்து பசுபதி மீது கேஸ் போட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று ஒரு வக்கீலை பார்க்க வந்தார்கள். அவரும் நோட்டீஸ் அனுப்புகிறேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….