Mahanadhi Serial Today Episode | 21.07.2023 | Vijaytv
mahanadhi. 21.07.2023
மகாநதி தொடரில் இன்று, காவேரி பசுபதியிடம் சவால் விட்டது போல் நடந்த அத்தனை போட்டியிலும் கலந்து கொண்டு அனைத்திலும் முதல் இடம் பிடித்தார். பின் பசுபதி பரிசு கொடுக்கும்போது காவேரியை கேவலமாக பேசினார். உன் அப்பா உயிரோடு இருந்த போது என்னிடம் பிச்சை எடுத்தான். இப்போது அவன் இல்லை, அதனால் நீ பிச்சை எடுக்கிராய் என்று கூறினார். மேலும் நான் கொடுப்பதை வனகிகொள் என்று கேவலமாக பேசினார். இதனால் கோவத்தில் காவேரி மேடையில் தான் இந்த பரிசு பொருட்களுக்காக விளையாடவில்லை. என்னால் முடியாது என்று சொன்னவர்கள் முன் வெள்ளவே கலந்து கொண்டேன் என்று கூறினார். மேலும் தன் அப்பாவின் பணமும் இதில் உள்ளது. இந்த பசுபதி எனது அப்பாவை ஏமாற்றியது கூடிய சீக்கிரமே அனைவருக்கும் புரிய வைப்பேன் என்று கூறினார். அதற்கு நிவின் கை தட்டி விசில் அடித்து பாராட்டினார். இதனால் ராகினி மேலும் எரிச்சல் அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..