Mahanadhi Serial Today Episode | 27.06.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, நிவின் காவேரியை தனியாக படம் பார்க்க அழைத்து வந்து இருந்தார். பாதி படம் பார்த்த பின் நிவின் காவேரிக்கு சாப்பிட எதாவது வாங்கி வர கிளம்பினார். போனவரை ஆளையே காணவில்லை. அந்த நேரம் காவேரியை பற்றி கவிதை அந்த ஸ்க்ரீனில் வந்தது. அவரது சிரிப்பு, அழுகை, துக்கம், கிண்டல் என்று அவரின் ஒவ்வொரு அசைவையும் நிவின் ரசித்து புகைப்படம் எடுத்து அதற்கு ஏற்ப கவிதையும் எழுதி இருந்தார். அதை பார்த்த காவேரி அதிர்ச்சியில் உரைந்தார். கடைசியில் நிவின் கையில் பூவை கொடுத்து, தன்னை காதலிக்குமாரு கேட்டுக்கொண்டார். அதை காவேரியும் உடனே வாங்கிக்கொண்டு, அவர் மனதில் இருந்த காதலை கூறினார். அதே நேரம் கங்கா பதட்டமாக இருந்தார். காவேரி தனியாக தோழி வீட்டுக்கு கிளம்பியவள் இன்னும் தனக்கு அழைக்காவில்லை. மேலும் அவர் ஃபோன் எடுக்கவில்லை என்று பதறினார். நர்மதா நிவின் அண்ணனோடு தானே கிளம்பினார், பின் எதற்கு பயப்பட வேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author